தமிழ்நாடு செய்திகள்

கடற்கரை-வேளச்சேரி இடையிலான புறநகர் ரெயில் சேவை நிறுத்தம்

Published On 2024-11-30 13:42 IST   |   Update On 2024-11-30 14:51:00 IST
  • ஃபெஞ்சல் புயல் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது ஃபெஞ்சல் புயல் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னையிலிருந்து 110 கிலோ மீட்டர் தூரத்தில் புயல் மையம் கொண்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையிலான புறநகர் ரெயில் சேவை நிறுத்தப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருவதாக ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் பறக்கும் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 12.15 மணி முதல் பறக்கும் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News