இந்தியா மீதான ராணுவ தாக்குதலை மேலும் அதிகரித்தால் தக்க பதிலடி- விக்ரம் மிஸ்ரி
- இந்தியாவின் மீதான தாக்குதல்கள் முறியடிப்பு என்றார்.
- இந்தியாவின் தாக்குதலால் கொல்லப்பட்டவர்கள் அனைவருமே பயங்கரவாதிகள்தான்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 16 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.
எல்லையை ஒட்டிய 15 நகரங்கள் மீதான தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் ஸ்ரீநகர், ஜம்மு உள்ளிட்ட 12 இடங்களில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பாகிஸ்தான் இந்திய ராணுவ தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு பதற்றம் அதிகரிக்காத வகையில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது.
இந்தியாவின் ட்ரோன்களை பாகிஸ்தான் தகர்த்ததாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது.
இந்தியா மீதான ராணுவ தாக்குதலை மேலும் அதிகரித்தால் தக்க பதிலடி தரப்படும்.
இந்தியாவின் தாக்குதலால் கொல்லப்பட்டவர்கள் அனைவருமே பயங்கரவாதிகள்தான்.
இந்தியா போர் பதற்றத்தை ஏற்படுத்தவில்லை, பதிலடி மட்டுமே தருகிறது.
லாகூரில் உள்ள பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் ஏவுகணைகளை இந்தியாவின் ஏவுகணை தடுப்பு அமைப்பு நடுவானிலேயே முறியடித்தது.
இந்தியா தொடர்பாக பாகிஸ்தானில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து TRF என்ற அமைப்பின் பெயரை நீக்க பாகிஸ்தான் அழுத்தம் கொடுத்தது. பஹல்காம் தாக்குதலுக்கு TRF தான் பொறுப்பேற்றிருந்தது.
இந்த பதற்றத்தை மேலும் அதிகரிக்க விரும்பவில்லை என்பதில் இந்தியா தெளிவாக உள்ளது.
பாகிஸ்தான் எப்போது உருவானதோ அப்போதே அவர்கள் பொய் சொல்ல ஆரம்பித்து விட்டனர். எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதை நாம் மட்டுமல்ல ஐ.நா குழுவை சேர்ந்தவர்களும் நேரில் ஆய்வு செய்துள்ளனர்.
பாகிஸ்தான் தான் பிரச்சனையை 22ம் தேதி முதலில் தொடங்கியது.
பாகிஸ்தான் தொடங்கிய பிரச்சனைக்கு நாம் பதிலடி தான் கொடுத்து வருகிறோம். நாட்டின் பாதுகாப்புக்காக பதிலடி கொடுக்க வேண்டியது கட்டாயம்.
பயங்கரவாதிகளின் தலைவர்கள் யார் யார் கொல்லப்பட்டார்கள் என்ற தகவல்களை தற்போது வெளியிட முடியாது. அதற்கு இது சரியான நேரமல்ல.
சர்வதேச நாணய நிதியம் தாமாக முன்வந்து சூழ்நிலைகளை ஆராய்ந்து பாகிஸ்தான் மீது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பேசி உள்ளனர்.
கொடூர தாக்குதலுக்கு ஆளான இந்தியாவின் பதிலடிக்கு உலக தலைவர்கள் மதிப்பளித்துள்ளனர். பயங்கரவாதத்திற்கு எதிரான அவர்களின் ஆதரவையும் நம்முடன் பகிர்ந்துள்ளனர்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.