தமிழ்நாடு செய்திகள்

15 வயது சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்ற துணை நடிகை கைது

Published On 2025-08-23 13:55 IST   |   Update On 2025-08-23 13:55:00 IST
  • சிறுமியின் தந்தை ஏற்கனவே இறந்துவிட்டதால் அவரது தாயும் வேறு ஒருவரை திருமணம் செய்து சென்றுவிட்டார்.
  • தனது தாயின் தோழி பராமரிப்பில் கடந்த 3ஆண்டுகளாக இருந்து வருகிறார்.

போரூர்:

சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள தங்கும் விடுதியில் விபச்சாரம் நடப்பதாக விபச்சார தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையிலான தனிப்படை போலீசார் விடுதி அறைக்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு கே.கே. நகர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை வாடிக்கையாளர் ஒருவருக்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றது தெரிந்தது. இதையடுத்து சிறுமியை மீட்ட போலீசார் அவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்த அழைத்து வந்த கே.கே நகரை சேர்ந்த அஞ்சலி, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சினிமா துணை நடிகை நாகம்மா மற்றும் நாகராஜ் உள்ளிட்ட 3பேர் கும்பலை அதிரடியாக கைது செய்தனர்.

சிறுமியின் தந்தை ஏற்கனவே இறந்துவிட்டதால் அவரது தாயும் வேறு ஒருவரை திருமணம் செய்து சென்றுவிட்டார். இதனால் சிறுமி கே.கே. நகரில் உள்ள தனது தாயின் தோழியான அஞ்சலியின் பராமரிப்பில் கடந்த 3ஆண்டுகளாக இருந்து வருகிறார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அஞ்சலி ஆசைவார்த்தை கூறி சிறுமியை விபச்சாரத்தில் தள்ளி பலருக்கு விருந்தாக்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News