தமிழ்நாடு செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன கவுன்சிலர் பதவி- இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Published On 2025-07-01 09:22 IST   |   Update On 2025-07-01 09:22:00 IST
  • வருகிற 17-ந்தேதி வேட்பு மனுக்களை சமர்ப்பிக்க கடைசி நாளாகும்.
  • விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்ய ஆட்சியர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன கவுன்சிலர் பதவி அளிக்க அரசு உத்தரவிட்டுஉள்ளது. மாற்றுத்திறனாளிகள், தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உள்ளாட்சியில் பதவிகளை பெறும் வகையில், சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி, தற்போது அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளிலும், தலா ஒரு தகுதியான மாற்றுத்திறனாளி நபருக்கு, நியமன கவுன்சிலர் பதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாநகராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர்களாக இணைய இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றத்திற்கு https://chennaicorporation.gov.in என்ற இணையதள முகவரியிலும், பிற மாநகராட்சி/நகராட்சி மன்றத்திற்கு https://tnurbantree.tn.gov.in/whatsnew என்ற இணையதள முகவரியிலும், பேரூராட்சி மன்றத்திற்கு https://tn.gov.in/dtp அல்லது https://dtp.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் இன்று முதல் 17-ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

வருகிற 17-ந்தேதி வேட்பு மனுக்களை சமர்ப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்ய ஆட்சியர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News