தமிழ்நாடு செய்திகள்
மன்னிப்பு கேட்க வேண்டும்..! ரூ.50 லட்சம் மான நஷ்டஈடு கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ்
- அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பி.ஆர்.ஓ நடராஜன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
- அண்ணாமலைக்கு எதிராக மான நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரப்படும்.
திமுக நிர்வாகி கோட்டூர்புரம் சண்முகம், முன்னாள் பிஆர்ஓ நடராஜனின் நண்பர் என அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து, அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் ரூ.50 லட்சம் மான நஷ்டஈடு கேட்டு அண்ணாமலைக்கு பல்கலை. முன்னாள் பி.ஆர்.ஓ நடராஜன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில் அவர்,"அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தன்னை தொடர்புப்படுத்திய மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சமூக வலைதளத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்.
தவறும்பட்சத்தில் அண்ணாமலைக்கு எதிராக மான நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரப்படும்" என பல்கலை. முன்னாள் பி.ஆர்.ஓ நடராஜன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.