தமிழ்நாடு செய்திகள்

'ப' வடிவ இருக்கைகள் அறிவிப்பு நிறுத்தம் என்பது தவறான தகவல்- கல்வித்துறை அறிவிப்பு

Published On 2025-07-14 08:14 IST   |   Update On 2025-07-14 08:14:00 IST
  • ‘ப' வடிவ இருக்கை உத்தரவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
  • பள்ளிக்கல்வித்துறை அந்த உத்தரவை நிறுத்தி வைக்க உத்தரவிட்டதாக சமூக வலைதளங்களில் நேற்று செய்திகள் வைரல் ஆகின.

சென்னை:

பள்ளி வகுப்பறைகளில் 'ப' வடிவில் இருக்கைகள் கேரள பள்ளிகளில் அமைக்கப்பட்டது. இது ஒரு திரைப்படத்தில் வந்த காட்சியை பின்பற்றி செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் கேரளாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பள்ளி வகுப்பறைகளில் 'ப' வடிவ இருக்கைகளை அமைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து இருந்தது.

பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து, அரசியல் கட்சியினர் சிலர் திரைப்படத்தை பார்த்து பள்ளிக்கல்வித்துறை சீரழிகிறது என்றும், மாணவ-மாணவிகளுக்கு கழுத்து, முதுகுவலி ஏற்படும் என்றும், உடனடியாக 'ப' வடிவ இருக்கை உத்தரவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அந்த உத்தரவை நிறுத்தி வைக்க உத்தரவிட்டதாக சமூக வலைதளங்களில் நேற்று செய்திகள் வைரல் ஆகின. ஆனால் அதுபற்றி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'அப்படி எந்த உத்தரவையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிடவில்லை எனவும், அது நிறுத்தி வைத்ததாக வரும் செய்தி முற்றிலும் தவறான தகவல் எனவும், 'ப' வடிவ இருக்கை அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News