தமிழ்நாடு செய்திகள்

எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அண்ணாமலை வாழ்த்து

Published On 2025-06-18 17:16 IST   |   Update On 2025-06-18 17:16:00 IST
  • 2025ம் ஆண்டுக்கான 'பால சாகித்ய புரஸ்கார் விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மென்மேலும் பல விருதுகளை வெல்ல, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு 2025ம் ஆண்டுக்கான 'பால சாகித்ய புரஸ்கார் விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் எழுதிய 'ஒற்றைச் சிறகு ஓவியா' என்ற நாவலுக்காக ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகையுடன் விழும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு பா.ஜ.க மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வௌியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

2025 ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருதினை வென்றுள்ள எழுத்தாளர் திரு. விஷ்ணுபுரம் சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒற்றைச் சிறகு ஓவியா என்ற சிறுவர் நாவலுக்காக இந்த உயரிய விருதை வென்றுள்ள திரு. விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள், கவிஞர், கட்டுரையாளர், கதை சொல்லி, சிறார் எழுத்தாளர், இதழாசிரியர் என, பல தளங்களில் முத்திரை பதித்தவர்.

திரு. விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள், இலக்கியத்தில் தொடர்ந்து பல படைப்புகளை மேற்கொண்டு, மென்மேலும் பல விருதுகளை வெல்ல, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News