அண்ணாசாலை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
- மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
- பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னை:
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;-
சென்னையில் நாளை (10-ந்தேதி) அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அண்ணாசாலை: ஒயிட்ஸ் சாலை ஒரு பகுதி, அண்ணாசாலை ஒரு பகுதி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஐ.டி.சி. ஓட்டல், வாசன் அவென்யு, அண்ணாசாலை ஒரு பகுதி, ரஹேஜா டவர், ஜி.பி. சாலை, சத்தியமூர்த்தி பவன், இ.பி. காம்ப்ளெக்ஸ், இ.பி. லிங்க் சாலை, கிளப்ஹவுஸ், சிட்டி டவர், பட்டுலா சாலை, எக்ஸ்பிரஸ் அவென்யு, கலைக்கல்லூரி, பின்னி சாலை, வி.சி. சாலை, ஓட்டல் காஞ்சி, இந்தியன் வங்கி, டி.எல்.எப்., பாகன் பில்டிங், எத்திராஜ் கல்லூரி, சக்தி டவர்ஸ், சிட்டி வங்கி, மதுரா வங்கி, ஐ.ஓ.பி. வங்கி, ராணிமெய்யம்மை ஹாஸ்டல், ஏர்இந்தியா, அப்போலோ மருத்துவமனை, மார்ஷல் சாலை, மான்டியத் சாலை, கனரா வங்கி, கன்னிமாரா ஓட்டல், டேட்டா சென்டர், தாஜ் ஓட்டல்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.