தமிழ்நாடு செய்திகள்
கூட்டுறவு வங்கி காலி இடங்களை நிரப்ப வெளியான அறிவிப்பு
- வருகிற 29-ந்தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
- அக்டோபர் 27-ந்தேதி எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
சென்னை:
கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் காலியாக உள்ள 2,000 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இன்று முதல் வருகிற 29-ந்தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அவற்றை பரிசீலித்து, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு செப்டம்பர் 5-ந்தேதி ஹால் டிக்கெட் வழங்கப்படும். செப்டம்பர் 12-ந்தேதி எழுத்து தேர்வு நடைபெற்று, அக்டோபர் 27-ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
நவம்பர் 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நேர்காணல் நடத்தி, இறுதி முடிவுகளை நவம்பர் 15-ந்தேதி வெளியிடப்படுகிறது.