தமிழ்நாடு செய்திகள்

டிசம்பர் 15-ல் அரசியல் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தும் முடிவு- ஓ.பன்னீர்செல்வம்

Published On 2025-11-24 21:37 IST   |   Update On 2025-11-24 21:37:00 IST
  • மக்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் அதிமுக இழந்துள்ளது.
  • அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கழகமாக மாறும்.

சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் அரங்கில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

அப்போது பேசிய அவர்," டிசம்பர் 15ம் தேதி அன்று நாம் எடுக்கின்ற முடிவு அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையும்.

தவறான பொதுக்குழு மற்றும் செயற்குழு, தொடர் தோல்வி ஆகியவற்றால் மக்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் அதிமுக இழந்துள்ளது" என்றார்.

மேலும், அதிமுக ஒன்றிணையாவிட்டால் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கழகமாக மாறும் என்று வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News