தமிழ்நாடு செய்திகள்
பொள்ளாச்சி வழக்கை விசாரித்த நீதிபதி உள்பட தமிழகத்தில் 77 நீதிபதிகள் பணியிட மாற்றம்
- நீதிபதிகள் பணி இடமாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அல்லி அறிவித்துள்ளார்.
- சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன் கரூர் மாவட்ட நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த நீதிபதி உள்பட 77 நீதிபதிகள் பணி இடமாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அல்லி அறிவித்துள்ளார்.
அதன்படி, பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தின தேவி, கரூர் குடும்ப நல நீதிமன்றத்திற்கு மற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பூந்தமல்லி வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன் கரூர் மாவட்ட நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்த எழில்வேலன், சேலம் மாவட்ட கூடுதல் நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.