தமிழ்நாடு செய்திகள்

கோவில் நிர்வாக பிரச்சனையில் முன்விரோதம்- கொலை வழக்கில் 14 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

Published On 2025-12-03 14:57 IST   |   Update On 2025-12-03 14:57:00 IST
  • வழக்கு தென்காசியில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
  • இன்று இந்த வழக்கில் நீதிபதி எஸ்.மனோஜ் குமார் தீர்ப்பு அளித்தார்.

தென்காசி:

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட காசிநாதபுரத்தில் சீவலப்பேரி சுடலை கோவிலில் சாமி கும்பிடுவதில் வரி வசூலில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக கடந்த 2015-ம் ஆண்டு மணிவேல் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 3 பேர் ஏற்கனவே இறந்து விட்டனர். இந்த வழக்கு தென்காசியில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இன்று இந்த வழக்கில் நீதிபதி எஸ்.மனோஜ் குமார் தீர்ப்பு அளித்தார். இந்த கொலை வக்கீல் குற்றம் சாட்டப்பட்டிருந்த விநாயகம், உலகநாதன், சிவ சுப்பிரமணியன், சுடலை, முத்துக்குமார், சுப்பிரமணியன், சந்தானம், சிவன் சேட், மாரி ராஜ், பிச்சையா, வேல் துரை, கருப்பையா, ரமேஷ், பண்டாரம், மணிவேல், கலைவாணன், முத்துராஜ் ஆகியோருக்கு கொலை குற்றத்திற்கு ஒரு ஆயுள் தண்டனை மற்றும் கொலை முயற்சிக்கு ஒரு ஆயுள் தண்டனை என இரட்டை ஆயுள் தண்டனை தனித்தனியாக அறிவித்தும் மற்ற குற்றவாளிகள் அனைவருக்கும் தலா ரூ. 41 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் வேலுச்சாமி வாதாடினார்.

Tags:    

Similar News