தமிழ்நாடு செய்திகள்
நெல்லையில் இளம்பெண் படுகொலை: போலீசார் விசாரணை
- கடையில் இருந்து குடோனுக்கு பொருட்கள் எடுக்க சென்றபோது இந்த வெறிச்செயல் நிகழ்ந்துள்ளது.
- கடைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை டவுன் கீழ ரத வீதியில் பேன்சி ஸ்டோரில் வேலை செய்யும் சந்தியா (18) என்ற இளம்பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடையில் இருந்து குடோனுக்கு பொருட்கள் எடுக்க சென்றபோது இந்த வெறிச்செயல் நிகழ்ந்துள்ளது.
ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் அருகே நடந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இளம்பெண் கொலை தொடர்பாக நெல்லை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
காதல் விவகாரத்தில் படுகொலை சம்பவம் நடைபெற்றுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.