தமிழ்நாடு

முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியது

Published On 2022-11-16 06:24 GMT   |   Update On 2022-11-16 06:24 GMT
  • மசினகுடியில் பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது.
  • பாதுகாப்பு உபகரணங்களுடன் வனப்பகுதிக்குள் சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

கூடலூர்:

நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள புலிகள் காப்பகத்தில் ஏராளமான புலிகள், யானைகள், கரடிகள் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன.

இங்கு ஆண்டுக்கு இருமுறை வனவிலங்கு கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். பருவமழைக்கு முன்னரும், மழை ஓய்ந்த பின்னரும் என கணக்கெடுப்பு நடத்தப்படும்.

இந்த ஆண்டு பருவமழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியது. 100-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். அவர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் வனப்பகுதிக்குள் சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

இன்று தொடங்கிய இந்த பணி வருகிற 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது. மசினகுடியில் பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால் அங்கு கணக்கெடுப்புக்காக சென்ற வன ஊழியர்கள் பாதுகாப்புக்காக கையில் தீப்பந்தங்களை ஏந்தி சென்றனர்.

Tags:    

Similar News