தமிழ்நாடு செய்திகள்

கேப்டன் பெயர் வந்த விதம்

Published On 2023-12-28 12:21 IST   |   Update On 2023-12-28 12:21:00 IST
  • விஜயகாந்த் அனைவராலும் கேப்டன்.... கேப்டன்.... என்று பாசத்தோடு அழைக்கப்பட்டு வந்தார்.
  • விஜயகாந்த் உடற்பயிற்சி மேற்கொண்டு தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அனைவராலும் கேப்டன்.... கேப்டன்.... என்று பாசத்தோடு அழைக்கப்பட்டு வந்தார். விஜயகாந்துக்கு கேப்டன் என்கிற பெயர் அடைமொழியாக அமைந்ததற்கு அவரது திரையுலக பயணத்தில் கண்ட வெற்றியே முக்கிய காரணமாக இருந்துள்ளது.

விஜயகாந்தின் திரைப்படங்களில் மிகப்பெரிய மைல் கல் படமாக அமைந்தது கேப்டன் பிரபாகரன் படமாகும். இந்த படத்துக்கு பிறகு விஜயகாந்தை கட்சியினரும் பொதுமக்களும் அரசியல் பிரமுகர்களும் கேப்டன் என்று அழைக்க தொடங்கினர்.

சினிமாவில் அனல் தெறிக்கும் சண்டை காட்சிகளாலும், வசனங்களாலும் பேசப்பட்ட விஜயகாந்த் உடற்பயிற்சி மேற்கொண்டு தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார். இதனால் கேப்டன் என்கிற பெயர் அவருக்கு பொருத்தமாகவே இருந்தது என்று அவரது திரையுலக நண்பர்களும் தே.மு.தி.க.வினரும் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News