தமிழ்நாடு செய்திகள்
திருவாரூர் மாவட்டத்தில் 2 பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி
- பருவநிலை மாற்றத்தின் காரணமாக வைரஸ் காய்ச்சல் குழந்தைகளுக்கு வேகமாக பரவி வருகிறது.
- பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் ஊர்களிலும் காய்ச்சல் முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் சமீபகாலமாக பருவநிலை மாற்றத்தின் காரணமாக வைரஸ் காய்ச்சல் குழந்தைகளுக்கு வேகமாக பரவி வந்தது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 2 பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரடாச்சேரி ஒன்றியத்தை சேர்ந்த ஒரு மாணவனுக்கும், மன்னார்குடி ஒன்றியத்தை சேர்ந்த ஒருவருக்கும் பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இருவரின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் ஊர்களிலும் காய்ச்சல் முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.