தமிழ்நாடு செய்திகள்
ஊரப்பாக்கம் ஏரிக்கரையில் போதை மாத்திரை விற்பனை- 2 பேர் கைது
- ஊரப்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் போதை மாத்திரை விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- கூடுவாஞ்சேரி போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
வண்டலூர்:
வண்டலூரை அடுத்த ஊரப்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் போதை மாத்திரை விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கூடுவாஞ்சேரி போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மீரான் (52) அசோக்குமார் (45) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து சுமார் 1 கிலோ 100 கிராம் எடை உள்ள போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். அவர்களுக்கு போதை மாத்திரை எப்படி கிடைத்தது, அவர்களுடன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.