தமிழ்நாடு செய்திகள்

மாடு முட்டியதில் தடுமாறி சாலையில் விழுந்தவர் பஸ் சக்கரத்தில் சிக்கி பலி

Published On 2023-11-20 11:26 IST   |   Update On 2023-11-20 14:50:00 IST
  • விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

நாகப்பட்டினம்:

நாகை மேல கோட்டவாசல் பகுதியைச் சேர்ந்தவர் சபரிராஜன் (வயது 55). தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள மேல கோட்டைவாசல் பகுதி பெட்ரோல் நிலையம் அருகே உள்ள சாலையில் நடந்து சென்றார்.

அப்போது அதே சாலையில் வந்த மாடு ஒன்று அவரை திடீரென முட்டியது. இதில் அவர் நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது திருவாரூரில் இருந்து நாகை நோக்கி வந்த அரசு பஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் சபரிராஜன் மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் நாகை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சபரிராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நாகை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கால்நடைகள் மற்றும் வளர்ப்பு விலங்குகளால் விபத்து மற்றும் உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசும், போலீசாரும் கால்நடைகளின் உரிமையாளர் மற்றும் வளர்ப்பு விலங்குகளின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற விபத்துக்கள் மற்றும் உயிரிழப்பை தடுக்க முடியும் என்றும் தெரிவித்தனர். தற்போது இந்த வீடியோ வைரல் வீடியோவாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News