தமிழ்நாடு செய்திகள்

மடிப்பாக்கம், மேடவாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்

Published On 2024-07-12 20:30 IST   |   Update On 2024-07-12 20:30:00 IST
  • இடது புறம் திரும்பி மேடவாக்கம் பிரதான சாலை வழியாக கீழ்கட்டளை நோக்கி செல்லலாம்.
  • கீழ்கட்டளையிலிருந்து மடிப்பாக்கம் நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம் எந்தவித மாற்றமும் இல்லை.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

எஸ்-7 மடிப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மடிப்பாக்கம் பிரதான சாலை மற்றும் மேடவாக்கம் பிரதான சாலை சந்திப்பில் கேஇசி நிறுவனத்தினர் சென்னை மெட்ரோ இரயில் பணிகளை மேற்கொள் உள்ளதால் 13.07.2024 மற்றும் 14.07.2024 ஆகிய இரண்டு நாட்களுக்கு சோதனை அடிப்படையில் பின்வருமாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

கைவேலியில் இருந்து கீழ்கட்டளை நோக்கி செல்லும் மாநகர பேருந்து மற்றும் இதர வாகனங்கள் அனைத்தும் இடது புறம் திரும்பி லேக்வியூ ரோடில் இருந்து வலது புறம் திரும்பி இராஜேந்திரன் நகர் சாலையிலிருந்து மீண்டும் இடது புறம் திரும்பி மேடவாக்கம் பிரதான சாலை வழியாக கீழ்கட்டளை நோக்கி செல்லலாம்.

மடிப்பாக்கம் இருந்து கீழ்கட்டளை நோக்கி செல்லும் வாகனங்கள் இடது புறம் திரும்பி சபரி சாலை ஆக்ஸிஸ் பேங்க் வழியாக வந்து வலது புறம் திரும்பி லேக்வியூ ரோடில் இருந்து மீண்டும் வலது புறம் திரும்பி இராஜேந்திரன் நகர் சாலையிலிருந்து இடதுபுறம் திரும்பி மேடவாக்கம் பிரதான சாலை வழியாக கீழ்கட்டளை நோக்கி செல்லலாம்.

கீழ்கட்டளையிலிருந்து மடிப்பாக்கம் நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம் எந்தவித மாற்றமும் இல்லை.

எனவே வாகன ஓட்டிகள் இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News