தமிழ்நாடு செய்திகள்

ஒருவாரம் ஜாலி தான்.. மழையால் மாறப்போகும் கிளைமேட்.. வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2024-07-21 09:09 IST   |   Update On 2024-07-21 09:09:00 IST
  • ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
  • நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மலைப்பகுதிகளில் ஓரிரு இங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் ஜூலை 26 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று துவங்கி ஜூலை 23 ஆம் தேதி வரை வடக்கு மத்திய வங்கக்கடல், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடேயே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையில் 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Tags:    

Similar News