தமிழ்நாடு

நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது- முதலமைச்சர் ஸ்டாலின்

Published On 2023-09-21 05:10 GMT   |   Update On 2023-09-21 07:41 GMT
  • நீட் தேர்வில் பூஜ்ஜியம் எடுத்தாலும் முதுநிலை படிப்பில் சேரலாம்
  • பயிற்சி மையங்களுக்கு பணம் செலுத்துவதற்கான தேர்வாக மாறிவிட்டது- முதல்வர்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

நீட் தேர்வின் பலன் என்ன என்றால் 'பூஜ்ஜியம்' தான் என்பதை ஒன்றிய பா.ஜ.க அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது.

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான தகுதி மதிப்பெண் 'பூஜ்ஜியம்' தான் என்று வரையறுப்பதன் மூலமாக நீட் என்றால் நேஷனல் எலிபிரிட்டி கம் என்ட்ரன்ஸ் டெஸ்ட் என்பதில் உள்ள Eligibility-க்குப் பொருள் கிடையாது என்பதை அவர்களே ஒப்புக் கொண்டு விட்டார்கள். கோச்சிங் சென்டர்களில் சேருங்கள், நீட் தேர்வுக்கு பணம் கட்டுங்கள் போதும் என்றாகி விட்டது.

நீட் = பூஜ்யம் என்றாகி விட்டது. இதைத்தான் நாங்கள் இத்தனை ஆண்டுகளாகச் சொல்லி வந்தோம். எத்தனை உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இரக்கமே இல்லாமல் இருந்துவிட்டு இப்போது இப்படி ஒரு உத்தரவு போட்டிருக்கிறார்கள்.

நீட் என்ற பலிபீடத்தைக் கொண்டு உயிரிழப்பை ஏற்படுத்தியதற்காகவே, இந்த பா.ஜ.க ஆட்சியை அகற்றியாக வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வில் பூஜ்ஜியம் மார்க் எடுத்தாலும் மருத்துவ முதுநிலை படிப்பில் சேரலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News