தமிழ்நாடு

ம.தி.மு.க.வில் வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை- வைகோ பேச்சு

Published On 2023-06-01 10:11 GMT   |   Update On 2023-06-01 10:11 GMT
  • எந்த புயல் வீசினாலும் ம.தி.மு.க.வை மன உறுதியுடன் நடத்தி வருகிறோம்.
  • ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி ம.தி.மு.க. பயணிக்கும்.

சென்னை:

ம.தி.மு.க. வின் உட்கட்சி தேர்தல் வருகிற 14-ந்தேதி நடைபெறுகிறது. இதில் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

பொதுச்செயலாளர் பதவிக்கு வைகோ இன்று மனுதாக்கல் செய்தார். அவைத்தலைவர் பதவிக்கு அர்ஜூன் ராஜ், பொருளாளர் பதவிக்கு செந்தில் லதிபன், முதன்மை செயலாளர் பதவிக்கு துரை வைகோ, துணை பொதுச் செயலாளர் பதவிக்கு மல்லை சத்யா உள்பட பல்வேறு பதவிகளுக்கு இன்று மனுதாக்கல் செய் தனர்.

எந்த புயல் வீசினாலும் ம.தி.மு.க.வை மன உறுதியுடன் நடத்தி வருகிறோம். என்னுடைய மகன் துரை வைகோ வாக்கெடுப்பு மூலமாகவே தேர்ந்தெடுக்கப்பட்டார். ம.தி.மு.க.வில் வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை.

இதில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது. ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி ம.தி.மு.க. பயணிக்கும்

இவ்வாறு வைகோ பேசினார்.

வேட்பு மனு தாக்கல் இன்று முடிவடைந்த நிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு வைகோ மட்டுமே மனுதாக்கல் செய்துள்ளார். அவரை எதிர்த்து வேறு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. எனவே ம.தி.மு.க. பொதுச்செயலாளராக வைகோ மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். இதற்கான அறிவிப்பு வருகிற 3-ந்தேதி வெளியாகிறது. 

Tags:    

Similar News