தமிழ்நாடு

கிராமத்துக்குள் புகுந்து விநாயகர் கோவிலை சுற்றி வந்த யானை- மக்கள் அச்சம்

Published On 2023-08-17 04:33 GMT   |   Update On 2023-08-17 04:33 GMT
  • வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை கிராமத்தையொட்டி அமைந்துள்ள பகுதியில் நடமாடியது.
  • வனத்துறையினர் காட்டு யானையை நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் நேற்று அதிகாலை தாளவாடி மலைப்பகுதியில் உள்ள நெய்தாலபுரம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை கிராமத்தையொட்டி அமைந்துள்ள பகுதியில் நடமாடியது.

அப்பகுதியில் மரத்தடியில் அமைந்துள்ள விநாயகர் கோவிலுக்கு வந்த காட்டு யானை மரத்தடி விநாயகர் கோவிலை சுற்றி வந்து சிறிது நேரம் அப்பகுதியில் நடமாடியது. காட்டு யானை நடமாட்டத்தை கண்ட அப்பகுதி விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் உடனடியாக இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் காட்டு யானையை நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். காட்டு யானை ஊருக்குள் புகுந்து மரத்தடி விநாயகர் கோவிலை சுற்றிய சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News