தமிழ்நாடு

மகளிர் கருத்தரங்கு ஏற்பாடு: கனிமொழி தலைமையில் நாளை ஆலோசனை

Published On 2023-09-23 06:21 GMT   |   Update On 2023-09-23 06:21 GMT
  • கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்துக்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
  • ஆலோசனைக் கூட்டம் தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் நாளை மாலை நடக்கிறது.

சென்னை:

மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒருவாரம் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. தி.மு.க. மகளிர் அணி சார்பில் அடுத்த மாதம் 14-ந்தேதி கருத்தரங்கு நடைபெறுகிறது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.வில் நடைபெறும் இந்த கருத்தரங்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட தேசிய பெண் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

தி.மு.க. துணை பொதுச்செயலாளரான கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் நாளை (24-ந்தேதி) மாலை நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கும் கனிமொழி எம்.பி. பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளார்.

Tags:    

Similar News