தமிழ்நாடு செய்திகள்

நாளை 77-வது சுதந்திர தின விழா- விஜய் வசந்த் வாழ்த்து

Published On 2023-08-14 12:17 IST   |   Update On 2023-08-14 12:17:00 IST
  • ஆங்கிலேயர்களுக்கு அடி பணியாமல் உயிரை துறந்த எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வீரவணக்கம்.
  • நமது முன்னோர்கள் நமக்காகவும் நமது வருங்கால தலைமுறையினருக்கும் பெற்று தந்த சுதந்திரத்தை பேணி காக்க வேண்டியது நமது கடமை.

நாடு முழுவதும் நாளை 77-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். 77வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேளையில் அதை பெறுவதற்கு நமது சுதந்திர போராட்ட வீரர்கள் செய்த தியாகங்களை நினைவு கூர்வோம். உயிர் கொடுத்து ரத்தம் சிந்தி நாட்டின் விடுதலை மட்டுமே லட்சியமாக கொண்டு போராடிய அவர்கள் நாம் இன்று சுதந்திர காற்றை சுவாசிப்பதற்கு காரணம். ஆங்கிலேயர்களுக்கு அடி பணியாமல் உயிரை துறந்த எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வீரவணக்கம்.

நமது முன்னோர்கள் நமக்காகவும் நமது வருங்கால தலைமுறையினருக்கும் பெற்று தந்த சுதந்திரத்தை பேணி காக்க வேண்டியது நமது கடமை. நமது சுதந்திரத்தை படிப்படியாக பறிக்க நினைக்கும் சக்திகளுக்கு எதிராக நாம் குரல் கொடுப்போம். நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் நாளை நடைபெறும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News