தமிழ்நாடு செய்திகள்

திருப்பூர் அருகே இன்று சேலையை அவிழ்த்து விவசாயிகள் நூதன போராட்டம்

Published On 2023-08-19 12:11 IST   |   Update On 2023-08-19 12:11:00 IST
  • ஒவ்வொரு நாளும் நூதன முறையில் போராட்டம் நடத்துகின்றனர்.
  • ஒவ்வொரு நாளும் விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலனூர்:

திருப்பூர் மாவட்டம் மூலனூரை அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் நல்லதங்காள் நீர்த்தேக்க அணை உள்ளது. இந்த அணையை கட்டுவதற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி அப்பகுதி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 7-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

ஒவ்வொரு நாளும் நூதன முறையில் போராட்டம் நடத்துகின்றனர். முதல் நாள் கோனேரிபட்டி கிராமத்தில் நல்லதங்காள் அணையில் இருந்து மண் எடுத்து வந்து அதை பூஜை செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.5-வது நாளன்று வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

6-வது நாளான நேற்று நாய்க்கு தாலி கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் 7-வது நாளான இன்று சேலையை அவிழ்க்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி விவசாயி ஒருவர் சேலை கட்டியிருந்த நிலையில், அதனை மற்ற விவசாயிகள் அவிழ்த்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோஷங்கள் எழுப்பினர். ஒவ்வொரு நாளும் விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News