தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: வேளாண்துறைக்கு ரூ.42,281.88 கோடி நிதி ஒதுக்கீடு- அப்டேட்ஸ்...
முதலமைச்சரின் பண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்திற்கு ரூ.206 கோடி ஒதுக்கீடு
துவரை சாகுபடிப் பரப்பு விரிவாக்க இயக்கம் செயல்படுத்த ரூ.17.50 கோடி நிதி ஒதுக்கீடு
ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்திற்கு ரூ.65.3 கோடி நிதி ஒதுக்கீடு
1500 ஏக்கரில் வீரிய ஒட்டு ரக ஆமண சாகுபடி செய்ய ரூ.18 லட்சம் ஒதுக்கீடு
பயிர்களின் சாகுபடியை 2.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பரவலாக்கம் செய்திட ரூ..45 கோடி நிதி ஒதுக்கீடு
ஆடாதொடா, நொச்சி போன்ற தாவர வகைகளை நடவு செய்திட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு
10,000 விவசாயிகளுக்கு தலா 2 மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட ரூ.6 கோடி மானியம்.
37,500 ஏக்கர் களர், அமில நிலங்களைச் சீர்ப்படுத்த ரூ.22.5 கோடி நிதி ஒதுக்கீடு
மண்வளம் குறித்து தெரிந்து கொள்வதற்காக தமிழ் மண்வளம் இணையதளம் வாயிலாக உரப் பரிந்துரை வழங்குவோம்.
2023-24 ஆம் ஆண்டில் 127 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியை எட்டுவதற்கு நடவடிக்கை.