தமிழ்நாடு

அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்- பயணிகள் அவதி

Published On 2022-09-17 04:52 GMT   |   Update On 2022-09-17 04:52 GMT
  • சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த பயணிகள் மின்சார ரெயிலும், அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் மின்சார ரெயில்களும் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
  • ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் வேலைக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், தொழிலாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

அரக்கோணம்:

அரக்கோணம் அடுத்த திருவாலங்காடு ரெயில் நிலையம் அருகே இன்று காலை சிக்னல் கோளாறு ஏற்பட்டது.

சென்னையில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் சிக்னல் கிடைக்காததால் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து சென்னையில் இருந்து வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலும் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதேபோல் சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக வரும் அனைத்து ரெயில்களும் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன.

இதேபோல் சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த பயணிகள் மின்சார ரெயிலும், அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் மின்சார ரெயில்களும் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் வேலைக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், தொழிலாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

இதையடுத்து சிக்னலில் ஏற்பட்ட கோளாறை ரெயில்வே என்ஜினீயர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்பு சிக்னலில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டது.

இதையடுத்து அனைத்து ரெயில்களும் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

குறித்த நேரத்திற்கு ரெயில்கள் வராததால் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பயணிகள் தவிப்புடன் காத்திருந்தனர்.

Tags:    

Similar News