தமிழ்நாடு செய்திகள்

கோடம்பாக்கம்-போரூர் இடையே சாலை பழுதுபார்ப்பு பணி விரைவில் முடியும்: மெட்ரோ ரெயில் நிறுவனம் தகவல்

Published On 2023-09-28 05:21 IST   |   Update On 2023-09-28 05:28:00 IST
  • சாலை பழுதுபார்க்கும் பணிகள் அனைத்தும் முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • இரவு நேரங்களில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.

சென்னை:

மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோடம்பாக்கம் முதல் போரூர் வரையிலான ஆற்காடு சாலையில் வடபழனி, சாலிகிராமம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர், காரம்பாக்கம் மற்றும் ஆலப்பாக்கம் ஆகிய பகுதிகளில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் ஒப்பந்ததாரரான லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனத்தின் மூலம் சாலை பழுதுபார்க்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

எனவே, இரவு நேரங்களில் மழை பெய்யாத ஒரு வாரகாலத்தில் சாலை பழுதுபார்க்கும் பணிகள் அனைத்தும் முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகள் இரவு நேரங்களில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News