தமிழ்நாடு

மீண்டும் உயர்கல்வித்துறை அமைச்சராக பதவியேற்றார் பொன்முடி

Published On 2024-03-22 10:05 GMT   |   Update On 2024-03-22 10:21 GMT
  • கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பதவிப் பிரமாண நிகழ்ச்சியானது நடைபெற்றது.
  • நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர்பாபு, தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் பங்கேற்றனர்.

சென்னை:

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறை தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து பதவியை இழந்த பொன்முடி ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் தண்டனையை நிறுத்திவைத்து உத்தரவிட்டது.

இதையடுத்து பொன்முடி திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக தொடரலாம் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆனதை தொடர்ந்து அவரை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் முடிவு எடுக்க கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் 24 மணி நேரம் கெடு விதித்திருந்த நிலையில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கவர்னர் ஆர்.என்.ரவி பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதாக இன்று காலை 11 மணியளவில் கவர்னர் மாளிகையில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பதவிப் பிரமாண நிகழ்ச்சியானது நடைபெற்றது. பொன்முடிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து பொன்முடி உயர்கல்வித்துறை அமைச்சரானார்.


இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா. சுப்பிரமணியன், சேகர்பாபு, தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News