தமிழ்நாடு
SETC முன்பதிவு மையம்

பொங்கல் பண்டிகைக்கான அரசு பேருந்து முன்பதிவு துவக்கம்

Published On 2023-12-13 02:49 GMT   |   Update On 2023-12-13 04:44 GMT
  • பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் 15-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.
  • நேரிலும், ஆன்லைனிலும் டிக்கெட் முன்பதிவு நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15 முதல் 17-ம் தேதி வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்வோர் அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை திங்கள் கிழமையில் வருகிறது. அந்த வகையில், பொங்கலுக்கு முந்தைய சனி மற்றும் ஞாயிறு என இரண்டு வார இறுதி நாட்கள் உள்ளன. இதன் காரணமாக பொங்கலுக்கு முந்தைய வார இறுதியில் சொந்த ஊர் செல்வோர், ஜனவரி 12-ம் தேதி சென்னையில் இருந்து கிளம்புவதற்கு அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

வழக்கமாக அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய ஒரு மாத காலத்திற்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ள முடியும். அந்த வகையில் போகி பண்டிகைக்கு முதல் நாளான ஜனவரி 13-ம் தேதி சொந்த ஊர் செல்லும் பயணிகள் நாளை நேரிலும், TNSTC வலைதளம் அல்லது செயலியிலும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

Tags:    

Similar News