தமிழ்நாடு செய்திகள்

பாட்டுப்பாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸ்காரரை படத்தில் காணலாம்.


தீபாவளி நெரிசல் கூட்டத்தை தவிர்க்க பாட்டுபாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸ்காரர்

Published On 2022-10-18 11:09 IST   |   Update On 2022-10-18 11:09:00 IST
  • போக்குவரத்து இடையூறாக உள்ள இடத்தில் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
  • வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என போக்குவரத்து காவலரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

விருத்தாசலம்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விருத்தாசலம் பஸ் நிலையம், பாலக்கரை ரவுண்டானா, கடைவீதி உள்ளிட்ட இடங்களில் காவல்துறையின் சார்பில் ஒலிபெருக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் போக்குவரத்து இடையூறாக உள்ள இடத்தில் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

போக்குவரத்து தலைமை காவலர் சிவபெருமாள் என்பவர் பொதுமக்களிடையே ஒலிபெருக்கி மூலம், வாகன ஓட்டிகள் இடது புறமாக செல்லவேண்டும். வாகனத்தில் செல்லும்போது செல்போன் பேசக்கூடாது, ஹெல்மெட் அணிய வேண்டும். பெண்கள் தங்கள் உடைமைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும், விபத்து ஏற்பட்டால் அவர்களின் குடும்பத்திற்கு என்ன இழப்பு என்பன குறித்து பாடல்களை பாடி அந்த பாடலுக்கு விளக்கம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இதனை அப்பகுதிகளில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என போக்குவரத்து காவலரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News