தமிழ்நாடு செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க போட்டியில்லை- அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

Published On 2023-01-21 12:09 IST   |   Update On 2023-01-21 12:54:00 IST
  • இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் உயர் நிலைக்குழு கூட்டத்தில் முடிவு.
  • பா.ம.க எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்று அறிவிப்பு.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடப்போவதில்லை என்று அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அன்புமணி ராமதாஸ் மேலும் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் உயர் நிலைக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை.

இடைத்தேர்தல்கள் தேவையற்றவை, மக்களின் வரிப் பணத்தையும், நேரத்தையும் வீணடிப்பவை.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News