தமிழ்நாடு செய்திகள்
த.மா.கா கட்சி தலைவர் ஜி.கே.வாசனுடன் ஓ.பி.எஸ் அணியினர் சந்திப்பு
- சந்திப்பில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
- தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் உடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறுகிறது. முன்னாள் முதல்வர்களாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இருவரும் அளித்த தனித்தனி பேட்டியில் ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக போட்டியிடும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் உடன் ஓ.பி.எஸ் அணியினர் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தங்கள் தரப்புக்கு ஆதரவு அளிக்கும்படி ஓ.பி.எஸ் கோரியுள்ளார்.
ஏற்கனவே, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் உடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.