தமிழ்நாடு செய்திகள்

மருத்துவமனையில் திருமா.. தொலைபேசியில் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Published On 2023-09-26 19:46 IST   |   Update On 2023-09-26 19:46:00 IST
  • திருமாவளவனுக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
  • நின்றுகொண்டே கட்சி நிர்வாகிகளையும், பார்வையாளர்களையும் சந்தித்தார் திருமாவளவன்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு சென்னை வந்த திருமாவளவன் முதுகு எரிச்சல் காரணமாக அவதிப்பட்டார். வடபழனி கட்சி அலுவலகத்தில் அவர் மணிக்கணக்கில் நின்றுகொண்டே கட்சி நிர்வாகிகளையும், பார்வையாளர்களையும் சந்தித்ததில் மிகவும் சோர்வடைந்து விட்டார்.

உடல் வலி அதிகமாகி காய்ச்சலும் அவருக்கு வந்துவிட்டது. இதனால் அவர் வடபழனியில் உள்ள ஆஸ்பத்திரியில் நேற்றிரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் திருமாவளவனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

Tags:    

Similar News