தமிழ்நாடு செய்திகள்

எனது பலமாக இதைத்தான் நினைக்கிறேன் - உதயநிதி ஓபன் டாக்

Published On 2024-01-19 12:01 IST   |   Update On 2024-01-19 12:01:00 IST
  • கண்டிப்பா அரசியல் தான் பிடிச்சிருக்கு...
  • நெஞ்சுக்கு நீதி, மனிதன் போன்ற Challenge படங்கள் பண்ண பிடித்திருந்தது.

சென்னை :

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது:-

கே: எது எளிதாக இருக்கும்னு நினைக்கிறீர்கள்? எது பிடிச்சிருக்குன்னு நினைக்கிறீங்க? சினிமாவா, அரசியலா?

ப: கண்டிப்பா அரசியல் தான் பிடிச்சிருக்கு... சினிமாவில் Challenge ஆனா படங்கள் பண்ண பிடிக்கும். நெஞ்சுக்கு நீதி, மனிதன் போன்ற Challenge படங்கள் பண்ண பிடித்திருந்தது. மக்கள் பணி இது. எல்லா நேரத்திலும் அலர்ட்டா இருக்க வேண்டி வரும்.

இரண்டாவது மாநில மாநாடுக்காக 3 மாதங்களாக மிகப்பெரிய ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தபோது தூத்துக்குடி, நெல்லையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தலைவர் ஒருவாரம் தள்ளி வைக்க சொன்னாரு. பெரிய பாதிப்பு இருக்கு, மாநாடு நடத்த சரியாக இருக்காது. களத்தில் நிற்கணும்னு சொன்னாரு.


நெல்லை, தூத்துக்குடியில் ஒரு வாரம் தங்கி இருந்தேன். அங்கு பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, 10 அமைச்சர்கள் அனைவரும் களத்தில்தான் இருந்தனர்.

கே: அமைச்சர் உதயநிதியின் பலமாக எதை நினைக்கிறார்?

ப: தலைவரை பார்த்து உழைக்க முயற்சிக்கிறேன். அவரை பார்த்து அவரது உழைப்பில் 25 சதவீதம் 30 சதவீதம் உழைத்தால் பெரிய சாதனையாக நினைக்கிறேன். அதற்காக ஓடிக்கொண்டு இருக்கிறேன். கலைஞருக்கு நிகர் கலைஞர் தான். பொறுப்பான செல்லப்பிள்ளையா இருக்க விரும்புகிறேன் என்றார்.

Tags:    

Similar News