தமிழ்நாடு செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 102.81 அடியாக இருந்தது. இன்று காலை நீர்மட்டம் சரிந்து 102. 79 அடியானது.
- நேற்று அணைக்கு 1410 கன அடி தண்ணீர் வந்தது. இன்று அணைக்கு வினாடிக்கு 1562 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
மேட்டூர்:
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால் ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளது.
இந்த நிலையில் சில பகுதிகளில் கோடை மழை பெய்தது. இதனால் ஆற்றில் நீர்வரத்து சற்று அதிகரித்தது.
மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 102.81 அடியாக இருந்தது. இன்று காலை நீர்மட்டம் சரிந்து 102. 79 அடியானது.
நேற்று அணைக்கு 1410 கன அடி தண்ணீர் வந்தது. இன்று அணைக்கு வினாடிக்கு 1562 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அணையில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.