தமிழ்நாடு செய்திகள்
மேட்டூர் அணையின் வலது கரையில் தண்ணீரில் மூழ்கி இருந்த பகுதிகள், தற்போது தண்ணீர் இன்றி வறண்டு கற்குவியல்களாக காட்சியளிக்கிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 102.81 அடியாக சரிவு
- மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 102.81 அடியாக உள்ளது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 1,410 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நீர்வரத்தை காட்டிலும், அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகமாக உள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 102.81 அடியாக உள்ளது.