தமிழ்நாடு

போலீஸ் நிலையம் முன்பு மன்சூர் அலிகான் திடீர் தர்ணா

Published On 2024-04-09 05:32 GMT   |   Update On 2024-04-09 07:18 GMT
  • பாராளுமன்ற தொகுதி முழுவதும் மன்சூர் அலிகான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
  • மன்சூர் அலிகானின் ஆதரவாளரை பா.ஜ.க.வை சேர்ந்த பிரமுகர் தாக்கியதாக கூறப்படுகிறது.

வேலூர்:

பிரபல நடிகரும் ஜனநாயக புலிகள் கட்சி தலைவருமான மன்சூர் அலிகான் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

வேலூர் பாராளுமன்ற தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகானின் ஆதரவாளரை பா.ஜ.க.வை சேர்ந்த பிரமுகர் தாக்கியதாக கூறப்படுகிறது. தனது ஆதரவாளரை தாக்கிய பா.ஜ.க. பிரமுகரை கைது செய்யக்கோரி நடிகர் மன்சூர் அலிகான் சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் நடவடிக்கை எடுக்காததால் இன்று காலை நடிகர் மன்சூர் அலிகான் சத்துவாச்சாரி போலீஸ் நிலையம் முன்பாக தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News