தமிழ்நாடு செய்திகள்

நிலம் வாங்கி தருவதாக முதியவரிடம் ரூ.10 லட்சம் மோசடி-கவுன்சிலர் கைது

Published On 2023-03-06 13:12 IST   |   Update On 2023-03-06 13:12:00 IST
  • கவுன்சிலர் ஜெயச்சந்திரன் ரூ.10 லட்சத்து 14 ஆயிரம் வாங்கி கொண்டு நிலத்தை கொடுக்காதது தெரியவந்தது.
  • கவுன்சிலர் ஜெயச்சந்திரனை போலீசார் இன்று கைது செய்தனர்.

மதுரை:

மதுரை சூர்யா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வய 64). இவர் மதுரை மாநகராட்சியில் சுயேட்சை கவுன்சிலராக இருக்கும் ஜெயச்சந்திரன் என்பவரிடம் சீட்டு சேர்ந்து ரூ.10 லட்சத்து 14 ஆயிரம் கட்டி உள்ளார்.

இந்த தொகைக்கு பொய்கைகரைப்பட்டி, கிடாரிப்பட்டி பகுதியில் உள்ள தனது நிலத்தை தருவதாக கூறி உள்ளார். ஆனால் சொன்னபடி அவர் நிலம் எழுதி கொடுக்க வில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட சுப்பிரமணியம், இதுபற்றி மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். அதன் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

அப்போது சுப்பிரமணியம், தான் பணம் கட்டியதற்கான ஆவணங்களை காண்பித்தார். விசாரணை முடிவில் கவுன்சிலர் ஜெயச்சந்திரன் ரூ.10 லட்சத்து 14 ஆயிரம் வாங்கி கொண்டு நிலத்தை கொடுக்காதது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கவுன்சிலர் ஜெயச்சந்திரனை போலீசார் இன்று கைது செய்தனர்.

இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News