தமிழ்நாடு செய்திகள்
நகை கடையில் புகுந்து 30 பவுன் நகை, 25 கிலோ வெள்ளி கொள்ளை
- நகை கடையின் சுவற்றில் துளையிட்டு கடையில் இருந்த 25 கிலோ வெள்ளி மற்றும் 30 பவுன் தங்க நகை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அனுமன் தீர்த்தம் பகுதியில் திருப்பத்தூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சேகர் என்பவருக்கு சொந்தமான நகை கடை உள்ளது.
நேற்று இரவு மர்ம நபர்கள் இந்த நகை கடையின் சுவற்றில் துளையிட்டு கடையில் இருந்த 25 கிலோ வெள்ளி மற்றும் 30 பவுன் தங்க நகை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதனை இன்று காலை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கடையின் உரிமையாளருக்கும், ஊத்தங்கரை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
கொள்ளை நடந்த நகை கடையை பார்வையிட்டனர். இந்த கடையில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.