தமிழ்நாடு செய்திகள்
கோத்தகிரி அருகே 2 குட்டிகளை முதுகில் சுமந்து சாலையை கடக்கும் தாய் கரடி
- நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது கேத்ரின் நீர்வீழ்ச்சி.
- மனிதர்கள் பார்ப்பதை அறிந்த கரடி, குட்டிகளுடன், தோட்டத்திற்குள் பதுங்கியது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது கேத்ரின் நீர்வீழ்ச்சி. தேயிலை தோட்டங்கள் அதிகமுள்ள இந்த பகுதியில் கரடி, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் கரடி ஒன்று 2 குட்டிகளை தனது முதுகில் சுமந்தவாறு தேயிலை தோட்டத்தில் உலாவந்தது இதனை அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்தனர்.
மனிதர்கள் பார்ப்பதை அறிந்த கரடி, குட்டிகளுடன், தோட்டத்திற்குள் பதுங்கியது. சிறிது நேரத்திற்கு பின்பு தாய் கரடி தனது 2 குட்டிகளையும் முதுகில் சுமந்தவாறு, அங்குள்ள சாலையை கடந்து சென்றது. இந்த காட்சிகளை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் தங்கள் செல்போன்களில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். மேலும் இதனை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.