தமிழ்நாடு

கொடநாடு வழக்கு - நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

Published On 2023-11-29 06:52 GMT   |   Update On 2023-11-29 07:16 GMT
  • 8 செல்போன்கள் மற்றும் 4 சிம்கார்டுகள் கோவையில் உள்ள தொழில் நுட்ப ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
  • உதகையில் உள்ள மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உதகை:

கொடநாடு கொலை கொள்ளை வழக்கை சிபிசிஐடி போலிசார் கடந்த ஓராண்டுக்கு மேலாக விசாரித்து வரும் நிலையில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த பிஜின் குட்டி, தீபு, ஜம்சீர் அலி ஆகியோரின் செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகளை ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதியிடம் சிபிசிஐடி தரப்பு மனுதாக்கல் செய்தனர்.

இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் பிஜின்குட்டி, தீபு, ஜம்சீர் அலி ஆகியோரின் 8 செல்போன்கள் மற்றும் 4 சிம்கார்டுகள் கோவையில் உள்ள தொழில் நுட்ப ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த ஆய்வத்தில் கடந்த 4 மாதங்களாக ஆய்வு செய்ய நிலையில் Recover செய்யப்பட்ட தகவல்கள் மற்றும் தகவல் பரிமாற்ற விபரங்களை அறிக்கையாகவும், ஆய்வு செய்யப்பட்ட செல்போன்கள், சிம்கார்டுகள் மற்றும் பென் டிரைவ்கள் மூடி முத்திரையிட்ட கவரில் இன்று காலை உதகையில் உள்ள மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News