நாகர்கோவிலில் வேலை வாய்ப்பு முகாம்- விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்
- வேலை வாய்ப்பு முகாமில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், கல்லூரி தாளாளர், கல்லூரி முதல்வர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கும் வகையில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமை நாகர்கோவிலில் விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார். பின்னர் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நியமன சான்றிதழ்களை வழங்கினார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் மாவட்டந்தோறும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்த அரசு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் இணைந்து சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் ஒன்றினை நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் வைத்து நடத்தியது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி ஜெரிபா, மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், கல்லூரி தாளாளர், கல்லூரி முதல்வர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 120 நிறுவனங்கள் கலந்து கொண்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப ஏற்பாடு செய்தனர். இந்த வேலை வாய்ப்பு முகாமில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.