தமிழ்நாடு செய்திகள்

ஏற்காட்டில் கனமழை: மலைப்பாதையில் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

Published On 2023-11-25 09:25 IST   |   Update On 2023-11-25 09:25:00 IST
  • ஏற்காடு மலைப்பாதையில் அதிக அளவில் மழை பெய்ததால் அங்குள்ள 10-க்கும் மேற்பட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.
  • மழையை தொடர்ந்து பனிப்பொழிவும் அதிகமாக உள்ளதால் கடும் குளிர் நிலவி வருகிறது.

சேலம்:

தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. குறிப்பாக ஆனைமடுவு மற்றும் ஏற்காட்டில் நேற்றிரவு கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. சேலம் மாநகரில் லேசான தூறலுடன் மழை பெய்தது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

ஏற்காட்டில் நேற்று மாலை 1 மணி நேரம் கனமழை கொட்டியது. குறிப்பாக ஏற்காடு மலைப்பாதையில் அதிக அளவில் மழை பெய்ததால் அங்குள்ள 10-க்கும் மேற்பட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்கிறார்கள். இந்த மழையை தொடர்ந்து பனிப்பொழிவும் அதிகமாக உள்ளதால் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் அதிக பட்சமாக ஆனைமடுவில் 35 மி .மீ. மழை பதிவாகி உள்ளது. ஏற்காடு 18.2, வீரகனூர் 10, ஓமலூர் 7, காடையாம்பட்டி 4, கரியகோவில் 2, மேட்டூர் 1.6, எடப்பாடி 1.2, சேலம் 1 மி.மீ. என மாவட்டடம் முழுவதும் 80 மி.மீ. மழை பெய்துள்ளது.

Tags:    

Similar News