தமிழ்நாடு செய்திகள்
- வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது.
- கிராமுக்கு 1 ரூபாய் 40 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.98.50-க்கும் கிலோவுக்கு ரூ.1,400 உயர்ந்து பார் வெள்ளி ரூ.98,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமான நிலையே நீடிக்கிறது. பெரும்பாலும் அதன் விலை உயர்ந்து வருவதையே பார்க்க முடிந்தது. இருப்பினும் இந்த வார தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை சவரனுக்கு சற்றே அதிகரித்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்து அதிர்ச்சியை அளித்துள்ளது.
தங்கம் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 6,780-க்கும் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,240-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் 40 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.98.50-க்கும் கிலோவுக்கு ரூ.1,400 உயர்ந்து பார் வெள்ளி ரூ.98,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.