தமிழ்நாடு செய்திகள்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 குறைந்தது

Published On 2023-09-28 11:00 IST   |   Update On 2023-09-28 11:00:00 IST
  • வெள்ளி விலையும் இன்று குறைந்து உள்ளது.
  • 1 கிலோ பார் வெள்ளி ரூ.76500-க்கு விற்பனையாகிறது.

சென்னை:

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக 1 பவுன் தங்கம் ரூ.44 ஆயிரத்தை தாண்டியே விற்பனையாகி வந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக காணப்பட்டது. கடந்த 19-ந்தேதி 1 பவுன் தங்கம் ரூ.44,400-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக குறைய தொடங்கியது.

21-ந்தேதி பவுன் ரூ.44,240 ஆக குறைந்தது. 24-ந்தேதி ரூ.44,168 ஆக குறைந்தது. அதன்பிறகு தொடர்ந்து 4 நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.44 ஆயிரத்துக்கு கீழே வந்தது. நேற்று பவுன் ரூ.43840-க்கு விற்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை பவுன் ரூ.43,280 ஆக குறைந்தது. ஒரேநாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.560 குறைந்து உள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.888 குறைந்துள்ளது.

நேற்று ஒருகிராம் தங்கம் ரூ.5480-க்கு விற்கப்பட்டது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.5410-க்கு விற்கப்படுகிறது. 4 நாட்களில் கிராமுக்கு ரூ.111 குறைந்துள்ளது.

இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்து உள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.77-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.76.50-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.76500-க்கு விற்பனையாகிறது.

Tags:    

Similar News