தமிழ்நாடு செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 40 உயர்வு

Published On 2022-10-08 11:34 IST   |   Update On 2022-10-08 11:34:00 IST
  • வெள்ளி விலை சற்று குறைந்து இருக்கிறது.
  • கிராம் ரூ 66.50-ல் இருந்து ரூ.66 ஆகவும் கிலோ ரூ 65,500-ல் இருந்து ரூ.60 ஆயிரமாகவும் குறைந்து உள்ளது.

சென்னை:

சென்னையில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. இன்று தங்கத்தின் விலை பவுனுக்கு 40 ரூபாய் அதிகரித்து உள்ளது.

நேற்று பவுன் ரூ38,680-க்கு விற்பனை ஆனது. இன்று இது ரூ.38,720 ஆக உயர்ந்து உள்ளது. கிராம் ரூ. 4,835-ல் இருந்து ரூ.4.840 ஆக உயர்ந்தது. தங்கம் ஒரே நாளில் கிராம் ரூ.5-ம் பவுன் ரூ.40-ம் அதிகரித்து உள்ளது.

வெள்ளி விலை சற்று குறைந்து இருக்கிறது. கிராம் ரூ 66.50-ல் இருந்து ரூ.66 ஆகவும் கிலோ ரூ 65,500-ல் இருந்து ரூ.60 ஆயிரமாகவும் குறைந்து உள்ளது.

Tags:    

Similar News