தமிழ்நாடு

காவிரி நீர் விவகாரத்தில் வீண் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

Published On 2023-09-28 04:51 GMT   |   Update On 2023-09-28 04:51 GMT
  • கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று சமூக வலைத்தளத்தில் வதந்திகளை பரப்புவது மிகவும் கண்டிக்கதக்கது.
  • மக்களின் உணர்ச்சிகளை தூண்டி கலகம் ஏற்படுவதை இரு மாநில அரசுகளும் கடுமையாக தடுத்து நிறுத்த வேண்டும்.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகா மற்றும் தமிழகத்திற்கு இடையில் நதிநீர் பங்கீடு விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு, இரண்டு மாநிலங்களுக்கு இடையே சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி சிறப்பாக பணியாற்றி வருகிறது.

அந்தந்த மாநில நிலவரத்திற்கு ஏற்ப கருத்து பரிமாற்றங்கள் இருக்கும். இதில் வன்முறைக்கு எந்த விதத்திலும் இடமில்லை. கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று சமூக வலைத்தளத்தில் வதந்திகளை பரப்புவது மிகவும் கண்டிக்கதக்கது. இதுபோன்ற வீண் வதந்திகளை பரப்புவர்கள் மீது கர்நாடகா அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மக்களின் உணர்ச்சிகளை தூண்டி கலகம் ஏற்படுவதை இரு மாநில அரசுகளும் கடுமையாக தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News