தமிழ்நாடு செய்திகள்
இஞ்சி.

இஞ்சி விலை கடும் உயர்வு: கிலோ ரூ.125-க்கு விற்பனை

Published On 2023-04-16 13:55 IST   |   Update On 2023-04-16 13:55:00 IST
  • இரு வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.60 முதல் 70 வரை மொத்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த இஞ்சி, தற்போது கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • சில்லரை விற்பனையில் கிலோ ரூ.125 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை:

சென்னை கோயம்பேடு சந்தையில் இஞ்சி வரத்து குறைவு காரணமாக சில்லரை விற்பனையில் கிலோ ரூ.125 முதல் ரூ.140 வரை விற்பனையானது.

இதுகுறித்து கோயம்பேடு வியாபாரிகள் கூறியதாவது:-

தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் உதகை, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், கர்நாடக மாநிலம் மைசூரு, ஹசன், கேரளத்தின் தேக்கடி, ஆலப்புழா ஆகிய இடங்களில் அதிக அளவில் இஞ்சி பயிரிடப்படுகிறது. மார்ச் 2-வது வாரத்தில் இஞ்சி அறுவடைக்காலம் முடிந்து விடும். ஏப்ரல் மாதம் முழுவதும் இஞ்சியின் நடவு காலம் என்பதால் அதன் வரத்து குறைந்து உள்ளது.

இரு வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.60 முதல் 70 வரை மொத்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த இஞ்சி, தற்போது கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனையில் கிலோ ரூ.125 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் கடந்த மாதம் வரை தினமும் 250 லாரிகளுக்கும் குறைவாக வரத்து உள்ளது. இதனால் விலையும் அதிகரித்துள்ளது. இதே போல் தமிழகத்தின் பெரிய சந்தைகளான சென்னை கோயம்பேடு, மதுரை மாட்டு தாவணி, ஒட்டன்சத்திரம், தலைவாசல், வடசேரி ஆகிய காய்கறி சந்தைகளிலும் இஞ்சி வரத்து குறைந்து உள்ளது. இந்த விலை உயர்வு மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்றனர்.

Tags:    

Similar News